Monday, Jan 13, 2025

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

By Jet Tamil

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

IMG 20231217 WA0065

அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக இன்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது.

IMG 20231217 WA0066

இதன் போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 20231217 WA0067
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு