தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள மக்களின் காணிகளை விடுவியுங்கள்! ஜனாதிபதியிடம் நயினாதீவு விகாராதிபதி கோரிக்கை
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்க வேண்டும், இது உங்கள் அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும்” என நயினாதீவு விகாராதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது நயினாதீவு நாகதீப விகாரைக்குச் சென்றிருந்த வேளையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
தையிட்டி விகாரைச் சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என குறிப்பிட்ட விகாராதிபதி, அந்த விகாரையைச் சுற்றியுள்ள மக்களின் தனியார் காணிகளை உடனடியாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதால், மக்களின் காணி விடுவிப்பு விவகாரத்தைத் தாமதிக்காமல் இந்த ஆட்சியிலேயே நிறைவேற்ற வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.




