கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர்.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.
உயிர்ப்பின் அடையாளமாக அதிகாலை மெழுகுவர்த்தி ஏந்தியவாறு சாட்சி பவனி இடம்பெற்றதுடன் திருப்பலியை வணக்கத்துக்குரிய கத்தரின் ஒப்புக்கொடுத்தார்
இதேவேளை, கிளிநொச்சி அங்கிலிகன் திருச்சபையிலும் விசேட வழிபாடு இடம்பெற்றது