Friday, Jan 17, 2025

அதிகரித்த நீர்மட்டம் – பல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

By jettamil

அதிகரித்த நீர்மட்டம் – பல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் நில்வலா கங்கையைச் சுற்றியுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பஸ்கொடை, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரெலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தறை பாடசாலை ஒன்றில் உள்ள 10 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெலிஜ்ஜவில மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரம் மற்றும் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தெலிஜ்ஜவில மகா வித்தியாலயத்தின் 6 மற்றும் 8 தர வகுப்புகள் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் பின்புறத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு