எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூன்று சதவீத தள்ளுபடியை ரத்து செய்ய முடிவு எடுத்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளது. இதன் பின்னர், மருத்துவமனைகள் மற்றும் மற்ற அரசாங்க நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவது என சங்கம் முடிவு செய்ததாக, அதன் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று உறுதி செய்துள்ளது. அதோடு, நுகர்வோர் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் பெற்றோலிய விநியோகஸ்தர்களுடன் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கூறியுள்ளார்.
இப்போது, நாடு முழுவதும் எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருகின்றனர்.