அமெரிக்காவிற்கு பதிலடி தரும் ரஷ்யா: இந்திய உறவு மேலும் வலுவடைந்தது
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தார்.
இந்த நடவடிக்கை இருந்தபோதிலும், அமெரிக்காவின் அழுத்தங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது.
இந்தியா-ரஷ்யா இடையேயான நீண்டகால உறவைச் சீர்குலைக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்தாலும், அது பயனற்றது என ரஷ்ய வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“நமது நீண்டகால நட்பு மற்றும் கலாசார உறவுகள் காரணமாக, இரு நாடுகளின் உறவைச் சிதைக்க முடியாது. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும். இந்தியா-ரஷ்யா உறவுகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன,” என ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.





