Friday, Jan 17, 2025

சந்நிதியான் ஆச்சிரமம் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள்!

By kajee

சந்நிதியான் ஆச்சிரமம் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு  மாவட்டத்திற்க்கு உட்பட்ட  ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்க்கு உட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலயத்திறக்கு அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்களுக்கு  2 மாதங்களுக்குரிய  மதிய உணவு வழங்குவதற்காக  உணவுப் பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சிவராத்திரி  தின நிகழ்வை முன்னிட்டு நெடுங்கேணி வெடுக்குநாறி  சிவாலயத்துக்கு அன்னதானப் பணிகளுக்காக  உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐயனார் முள்ளியவளை குடியிருப்பு, 1ம் வட்டாரத்தை சேர்ந்த  முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில்  தரம் – 06 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கும், வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும், 

பொன்னகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் கிளிநொச்சி, பொன்னகர் மத்தி பிரதேசத்தை சேர்ந்த 02 அறநெறி ஆசிரியர்களுக்கும்,  பொன்னகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் முல்லைத்தீவு, முறுகண்டி பபிரதேசத்தை சேர்ந்த அறநெறி ஆசிரியர் ஒருவருக்கும் , சுவாமி விவேகானந்தா அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும்  ஆனைவிழுந்தான் பிரதேசத்தை சேர்ந்த அறநெறி ஆசிரியர் ஒருவருக்குமாக 06 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

 இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு