தரம் 5 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு – அமைச்சர் டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
அத்தோடு உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாசுந்தரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் நடராஜா திருலிங்கநாதன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கைக்கான இந்திய தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பு,
- இந்திய மீனவர்கள் போராட்டம்,
- எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை மீனவர்கள் முன்னெடுக்கவுள்ள போரட்டம்
குறித்த விடையங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.