அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள விசேட கொடுப்பனவு
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 நிறுவன மக்களுக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பிரிவெனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.