ஆதியும் அந்தமும் இல்லா தமிழ் மொழி யாப்பிலக்கணத்துடன் தனித்தே இயங்கக்கூடிய மொழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஆரம்பமான நான்காவது தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்காலத்தில் விஞ்ஞானம் பெரு வளர்ச்சி கண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அதன் பரிணாம வளர்ச்சிக்கு தமிழ்மொழி சாஸ்திரங்கள் வித்திட்டதால் மெய்ப்பொருள் காண்பது அரிது என்றனர்.
அப்படிப்பட்ட தமிழுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையினர் நான்காவது தமிழியல் ஆய்வு மாநாடு என்னும் பெயரில் ஊர் கூடிய தேர் இழுத்துள்ளார்கள்.
இந்த மாநாட்டிலே தமிழை சிறப்பிக்க வேண்டும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக அரிய பல ஆய்வுகளை பல வருடங்களாக பேராசிரியர்கள் தொகுத்து சமர்ப்பித்துள்ளனர்.
எமக்கு காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார் எப்படி இருந்தார்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் விரிவாக தமது ஆய்வுகளில் கூறியுள்ளனர்.
இரு வருடங்களாக யாழ்பபாண அன்னையை சிறப்பிப்பதற்காக யாழ்பபாண மாநகர சபை முத்தமிழ் விழாவை எடுத்தது யாழ்பபாண அன்னைக்குப் பெருமை சேர்த்தது.
தமிழ் என்பது கங்கை ஊற்ரெடுத்து பாய்வது போன்றது காங்கை நீரை கைகளால் எடுத்து மேலே எறிவார்கள் அதேபோல தமிழ் அனங்கில் பிரபாகம் எடுத்து வந்தது தமிழ்.
பேராசிரியர் சிறிறஞ்சன் 11 வருட முயற்சியின் பலனாக தமிழ் அகராதியை நிறைவு செய்து முடித்துள்ளார் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தண்ணீர் ஆவியாகி பருவ மழையின் போது மலை நீராக இறங்குகிறது அவ்வாறே தமிழ் இறைவனால் திருநிலை படுத்தப்பட்டு அன்மைய கோசம், பிரணமய கோசம் , மனோமய கோசம், விஞ்ஞான கோசம் என தமிழ் பெருக்கடுத்துள்ளது.
இன் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பண்டித வகுப்புகளை (சியோடியல்) முறையில் கந்தையா காத்திகேசுவின் நிதி அனுசரணையுடன் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே ஆதியும் அந்தமும் இல்லாத தமிழை போற்றிப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் யாழ்ப்பண பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருவதுடன் அதற்காக எதிர்கால சாந்ததியினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.