தங்காலை சம்பவம்:லொறி சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
தங்காலை சீனிமோதர பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான “புவக்தண்டாவே சனா” என்பவரையும், போதைப்பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட லொறியின் சாரதியையும், எதிர்வரும் அக்டோபர் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள பழைய வீடு ஒன்றிலிருந்து கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. அத்துடன், அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பாகப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், “புவக்தண்டாவே சனா” மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





