Sunday, Jan 19, 2025

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி!

By kajee

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றது.

குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள்.

இதன்போது பார்வையாளர்கள்கள் தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு சிறிது நேரம் அமைதி இன்மை ஏற்பட்டது. பின்னர் ஒரு மணித்தியாலத்தில் நிகழ்ச்சி முடிவடைந்தது.

அந்த நிகழ்வு நிறைவு பெற்றதை கண்டித்து இன்று காலை தென்னிந்திய பிரபலமான கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் – வல்லை சந்தி பயணிகள் நிகழ் குடைக்குள் ஒட்டப்பட்டு இருந்தது.

Screenshot 20240210 161645 Facebook
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு