Welcome to Jettamil

ஈரானில் பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்புப் படையினர் நால்வர் பலி

Share

ஈரானிய பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் நால்வர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் அரச செய்தி முகவரகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடனான எல்லையிலுள்ள சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாணத்தில் சராவன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக  ஐஆர்என்ஏ  தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினரின் வலிமையான பிரசன்னம் காரணமாக, தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் திசையை நோக்கி தப்பிச் சென்றனர் எனவும் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

இப்பிராந்தியம் ஈரானின் மிக வறிய பிரதேசங்களில் ஒன்று எனவும், சிறுபான்மை சுன்னி இஸ்லாமியர்களான பலுச்சி இனத்தவர்களைக் கொண்ட பிராந்தியம் எனவும் ஏ.எவ்.பி. குறிப்பிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை