Monday, Jan 13, 2025

2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாத்த்துக்கான வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு!

By kajee

2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாத்த்துக்கான வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு!

தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பேசிவ இளம் தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு முகமாலையில் உள்ள சிவபுரவளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இதேவேளை வரப்புயர திட்டத்தின் கீழ்  மரங்கள் வழங்கும் நிகழ்வு முகமாலை கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

இக் கிராமத்தில்  யுத்த காலத்தில் அதிக மரங்கள் அழிவுற்றது. அதனால் மீண்டும் பயன்தரு மரங்களை நாட்டுவதன் மூலம் கிராம மக்கள் முன்னேற்றத்தை காண்பார்கள் என்ற நல்ல எண்ணத்துடன் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அன்பே சிவ தாயக இணைப்பாளர், நிர்வாகத்தினர், தொண்டர்கள், பணியாளர்கள், கிராம்மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்திலும் இவ் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு