Welcome to Jettamil

மகன் தாக்கியதில் தந்தை பலி தாய் படுகாயம்

Share

மகன் தாக்கியதில் தந்தை பலியானதுடன் தாய் படுகாயம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவு 1.00 மணியலவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிழந்துள்ளார்.

தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி 64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை