Monday, Jan 13, 2025

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளையதினம் நடைபெறவுள்ள முக்கிய கூட்டம்

By Jet Tamil

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

நாளை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இடம் பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

கலந்துரையாடலில் தமிழின அடையாளங்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராகவும் இந்துமத ஸ்தலங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் பாரிய அளவிலான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கவும் மேலும் எமது மத அடையாளங்களையும் இன அடையாளங்களையும் வருகின்ற காலங்களில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.

எனவே அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு