Welcome to Jettamil

சித்தங்கேணி இளைஞன் கொலை – சித்திரவதை செய்த இடத்தை ஆய்வுசெய்த விசாரணைக் குழு

Share

பொலிஸ் நிலையத்தில் இருந்து சித்திரவதைக்குள்ளான நிலையில் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில்நேற்றையதினம் (28) ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் உடனிருக்க, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன்போது உயிரிழந்த இளைஞனுடன் உடனிருந்த மூன்றாவது சாட்சியான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் நிலையத்திற்குள் உள்ள இடங்களை காண்பித்தார். இவற்றினை பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் சுமார் ஒன்றரை மணத்தியாலம் வரை விசாரணைகளை மேற்கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை