Welcome to Jettamil

மக்களின் அன்பே என் ஆரோக்கியத்துக்குக் காரணம் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருக்கமான பதிவு!

Share

மக்களின் அன்பே என் ஆரோக்கியத்துக்குக் காரணம் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருக்கமான பதிவு!

மக்களின் அன்பு மற்றும் அவர்களுடனான தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்குக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருக்கமான சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் இந்த உணர்வுப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அவருடைய பதிவில் மேலும் தெரிவித்ததாவது :

“மக்களுடன் சுதந்திரமாக இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். மக்களுடன் இருப்பது ஒருபோதும் எனக்கு சோர்வை ஏற்படுத்தாது. இது ஒரு பழக்கம்; ஒரு பிணைப்பு; அனைவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.”

“மக்களின் மனதில் உருவாகும் நம்பிக்கை மற்றும் பாசம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் மனித உறவுகளே, ஒரு மக்கள் தலைவரின் சகிப்புத்தன்மையையும், தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கிறது.”

“மக்கள் மத்தியில் இருப்பது என்னை உடலால் மேலும் பலப்படுத்துகிறது; மனதை ஆரோக்கியமாக்குகிறது.”

எப்போதும் ஒரே மாதிரி வந்து நலம் விசாரிக்கும் அன்புடனும், பாசத்துடனும் உரையாடும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அரசியல் சகாக்களையும் நினைவுகூர்வதாகவும் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை