Welcome to Jettamil

எதிர்வரும் ஜனவரி முதல் நடைமுறையாகும் புதிய திட்டம் – இலங்கை மின்சார சபை

Share

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி அந்நாளில் இருந்து இலத்திரனியல் மின்பட்டியல் அனுப்பிவைக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த இலத்திரனியல் மின்பட்டியலை இ-பில் (e-bill) மற்றும் குறுந்தகவல் (SMS) மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் (e-mail) மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக REG (இடைவெளி) கணக்கு இலக்கம் என டைப் செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவலை (SMS) அனுப்பி பதிவு செய்யலாம்.

மேலும் EBILL (இடைவெளி) கணக்கு இலக்கம் (இடைவெளி) உங்களுடைய மின்னஞ்சல் என டைப் செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவல் (SMS)அனுப்பி பதிவு செய்யல்லாம். இதுமட்டுமல்லாமல் EBILL.ceb.lk என்ற இணையப் பக்கத்தின் ஊடாகவும் பதிவு செய்யலாம் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை