Friday, Jan 17, 2025

கட்டாக்காலி ஆடு மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கட்டாக்காலி ஆடு மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

ஏறாவூர் நகர வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் ஆடு மாடுகள் இன்று தொடக்கம் நகர சபையினால் கைப்பற்றப் படுகின்றன.

இவ்வாறு கைப்பற்றப் படும் மாடொன்றுக்கு 5000/- ரூபாவும் ஆடொன்றுக்கு 2500/- ரூபாவும் தண்டப் பணமாக அறவிடப் படவுள்ளது.

எனவே கால்நடை உரிமையாளர்கள் உரிய தண்டப் பணத்தைச் செலுத்தி தமது கால்நடைகளை மீட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மூன்று தினங்களுக்குள் கட்டாக்காலிகள் உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்படாத விடத்து அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது .

இது தொடர்பாக பல தடவைகள் நகர சபையினால் அறிவிக்கப் பட்ட போதிலும் உரிமையாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு