Sunday, Jan 19, 2025

சட்டவிரோதமாக மண் கடத்தி வந்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

By kajee

சட்டவிரோதமாக மண் கடத்தி வந்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

இன்று, முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில் சட்டவிரேதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடாத்தி பிடித்தனர்.

பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடாத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் அந்த வீதியால் வந்துள்ளது.

பொலிசார் குறித்த டிப்பரை வழிமறித்த போதும், நிற்காமல் தப்பிச் சென்றது. இதனையடுத்து, வாகனமொன்றால் வழிமறித்து, டயரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடாத்தி, வாகனத்தை நிறுத்தினர். சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு