Welcome to Jettamil

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ராஜபக்ச குடும்பமே தடைக்கல்

Share

ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.

“புதிய பிரதமரின் நியமனம் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அடிபணிந்து, சிறிது காலம் மௌனம் காத்த போதிலும், சமயத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள பிரஜை என்ற ரீதியில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, என்னால் அமைதியாக இருக்க முடியாது.

தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் இருப்பதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தார்மீக உரிமை இல்லை.

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து நாட்டின் எதிர்காலத்தை மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

அதன்பின்னர், மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கலாம்.

தொழில்நுட்ப மற்றும் புத்திஜீவிகள் குழு மூலம் நிபுணத்துவ ஆலோசனை பெற்று, தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

நாட்டில் நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டும் என்றும்  பேராயர் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை