வரலாற்றுச்சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் கடல்வழி மார்க்கத்தின் தொடக்க பிரதேசமான குறிகாட்டுவானில் அரச மரம் ஒன்றும், நயினாதீவு விகாராதிபதியின் விளம்பரப்பலகையும் காணப்படுகிறது.
குறித்த பகுதி நெடுந்தீவு மக்கள், நயினாதீவு மக்கள் , சுற்றுலாப்பயணிகள் ஒன்றுகூடும் துறைமுகப்பகுதியாகும்.
அனைத்து மதத்தவர்களும் பாவிக்கும் பொதுப்பகுதியில் பௌத்த மதத்தை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி விளப்பரப்பலகை அமைக்கப்பட்டுள்ளமை ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம் கொள்ளுகின்றனர்.
அத்தோடு கடற்படையினரின் ஒத்துழைப்போடு அரசமரம் ஒன்றும் ஓலையால் மறைத்து வளர்க்கப்பட்டு வந்தது, நேற்று மறைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளது. புத்தர் வந்தமர்ந்து குடியேறுவதற்கான முன்னேற்பாடா? என மக்கள் சந்தேகம் வெளியிடுகின்றார்கள்.