Welcome to Jettamil

ஏற்கனவே உயிரிழந்த சகோதரன் மீது மோதிய அதே வாகனம்! திட்டமிட்ட கொலையா என மக்கள் சந்தேகம்

Share

ஏற்கனவே உயிரிழந்த சகோதரன் மீது மோதிய அதே வாகனம்! திட்டமிட்ட கொலையா என மக்கள் சந்தேகம்

கிளிநொச்சி ஏ-09 வீதியில், மத்திய கல்லூரிக்கு முன்பாக நேற்று (20.01.2026) இடம்பெற்ற விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஒருவரைப் பலிகொண்ட அதே கனரக வாகனம், தற்போது அவரது சகோதரர் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க முயன்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்தார்.

அந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 19ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அந்த டிப்பர் வாகனம், எதிர்பாராத விதமாக வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த, உயிரிழந்த நபரின் சகோதரர் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தெய்வாதீனமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். எனினும், ஏற்கனவே ஒருவரைப் பலிகொண்ட அதே வாகனம், தற்போது அவரது சகோதரர் மீதும் மோதியிருப்பது தற்செயலானது அல்ல என்றும், இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற கனரக வாகனங்களைப் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வழிமறித்ததால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் அமைதியின்மை நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் வாகனங்களைக் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை