Welcome to Jettamil

மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

Share

மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். அவரது மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை