ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான ஒமர் அல்-ஃபயேத் என்பவரையே கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
காசாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் காவல்துறை மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.