Welcome to Jettamil

அராலி, கலுண்டாய் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

Share

நேற்று (29) 1.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, கலுண்டாய் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அராலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்திலிருந்து அராலி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அராலி மத்தியைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) என்பவரும், வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த மகேஸ்வரன் மதுரன் (வயது 37) என்பவரும் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த இராசதுரை சூரியகுமார் (வயது 29) என்பவர் சிறு காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை