நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரகங்கள் இன்று (01) மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுமென ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆறு திருமுருகன் தலைமையில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து மீறல்களுக்கான தீர்வு காணும் கலந்துரையாடலின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகங்கள் சிவபூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மக்கள் வழிபட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என நெடுந்தீவுப் பகுதி இந்து பிரதிநிதி ஒருவரால் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.