Welcome to Jettamil

யாழ் அச்சுவேலிப் பகுதியில் வாகன விபத்து; இளைஞர் பலி!

Share

யாழ் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்தார். சிறிய லொறி ஒன்றும் மோட்டார் சைக்களிலும் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை