இசையமைப்பாளராக இருந்து அதன்பின் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் விஜய் ஆண்டனி.
இவர் நடிப்பில் வெளிவந்த நான், சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா[16 வயது] இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
12ஆம் வகுப்பு படித்து வரும் மீரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
படிப்பு காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாரா அல்லது குடும்பத்தினால் ஏற்பட்ட மன அழுத்தமா என தெரியவில்லை.
இதுகுறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், தற்கொலை எதற்கும் தீர்வு கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.