இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பாஜக கூட்டணி நாடகத்தை மக்கள் நம்பி ஏமாறமாட்டார்கள் என கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த உதயநிதி, அதனை தான் முன்பிருந்தே விளையாட்டாக பார்ப்பதாக தெரிவித்த அவர், அவர்களின் செயல்களால் மக்கள் ஏமாறமாட்டார்கள் என கூறினார்.
ஊழலற்ற அரசை வழங்கி வருவதாக கூறும் பாஜக அரசின் விளம்பரத்தை கடுமையாக விமர்சித்த உதயநிதி CAG அறிக்கை, ஆயுஷ் மான் பாரத் திட்டம் போன்றவற்றை சுட்டிக்காட்டி இந்த குற்றசாட்டுகளை மறைப்பதற்காக தான் பாஜக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என விமர்சனம் செய்தார்.
மீண்டும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஊழல் வழக்குகளுக்கு திமுகவை மிரட்டி பார்த்த நிலையில் அதற்கு திமுக அஞ்சாது என கூறிய உதயநிதி, ஆனால் தற்போது சண்டை போடுவது போல இருந்து விட்டு பின்னர் மீண்டும் அக்கட்சிகள் ஒன்றிணைந்து விடுவார்கள் என தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, ஊழலால் தண்டிக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் யாருனு உங்க எல்லாருக்கும் தெரியும் என்றும் ஊழல் வழக்குகளுக்கு அதிமுகவினர் அஞ்சுவார்கள் என்றும் ஒரே போன் காலில் அக்கட்சிகளின் கூட்டணி இணைந்து விடும் என தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் அமையும் கூட்டணியல்ல திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி என தெரிவித்து, வெற்றிகரமாக 7 ஆண்டுகளுக்கு மேல் இக்கூட்டணி கொள்கை ரீதியில் இணைந்துள்ளது என்று கூறி நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெரும் என கூறினார்.