Welcome to Jettamil

அதிகளவு ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

Share

அதிகளவு ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

அதிகளவு ஹெரோயினை பாவித்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நபர் நீர்வேலியில் உள்ள உறவினரது வீட்டில் 19ஆம் திகதி தங்கினார். அதன்பின்னர் நேற்றையதினம் ஊருக்கு வந்துள்ளார். இதன்போது நேற்றிரவு அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் அதிகளவான ஹெரோயின் பாவித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூற்று பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி திரு.பிரணவன் அவர்கள் மேற்கொண்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை