இன்றைய தினம் (10 திகதி) பாராளுமன்ற அமர்வு முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (10ம் திகதி ) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை மேற்கொள்ள கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதற்கமைய இன்று முதல் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.