பொத்துவில் பிரதேச செயலாளரின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில் நேற்றுக்காலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்ததை மக்கள் அவதானித்தனர்.
இரவோடு இரவாக இனந்தெரயாத நபர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து, தாண்டியடி மற்றும் சங்கமன்கண்டி கிராம பொது மக்கள் அணிதிரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் 2 நாட்களுக்குள் புத்தர் சிலையை அகற்றுவதாக திருக்கோவில் காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது .
இந்த நிலையிலேயே, நேற்று இரவு குறித்த புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.