Welcome to Jettamil

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படும் வீழ்ச்சி!

Share

தற்சமயம் விலை உயர்ந்து காணப்படும் வாகனங்களின் விலை அடுத்த வாரத்திற்குப் பிற் காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என்று தான் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய வங்கி ஆகியன வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான ஒழுங்குமுறை குறித்து கலந்தாலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலாளரினால் மேற்கொள்ளப்படும் இப் பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமையக் கூடும். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் சாதகமான தீர்வு கிடைக்கலாம்.

அதனடிப்படையில் தற்போது நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களின் விலை ஓரளவு குறையும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை