நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் மேல் மாகாண பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்ததுடன் ஏனைய மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் கூறினார்.
அத்துடன் மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 25ம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் 2021 கல்வியாண்டுக்கான முதல் தவணை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
முன்னர் தீர்மானித்ததது போல் எதிர்வரும் 15 ஆம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.