Welcome to Jettamil

பிராய்லர் கோழி, நம்மை அழித்துவிடும் ஆபத்தா?

Share

இந்த பிராய்லர் இறைச்சி நம்மை பல விதங்களில் அழித்து வருகிறது.

காலம் மாறிவிட்டது என்று நமது பழக்கவழக்கங்களையும் மாற்றிவிட்டோம். நாம் சரியானது எது, பிழையானது எது, என்று சிந்திக்க தவறிவிட்டோம்.

உணவுப் பொருட்களை பொருத்தவரை சுவைக்காக உண்பதே நமது இன்றைய வழக்கமாகவும் மாறிவிட்ட நிலையில், அப்படி தான் இன்று பிராய்லர் கோழிகள் சுவையும் நம்மை ஈர்த்துள்ளது.

40 நாளில் வளர்ச்சி பெற்று விற்பனைக்காக வரும் பிராய்லர் கோழிகள் வளர 12 விதமான கெமிக்கல்ஸ் வகை தேவைப்படுகிறது.

அவை நாம் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடும் போது உணவோடு கலக்கப்படுகிறது.

இந்த பிராய்லர் கோழிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டுகின்றது.

அதனால் கோழிகளுக்கு ஏற்படும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு,

அந்த பிராய்லர் இறைச்சியை சாப்பிடும் நமக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பிராய்லர் இறைச்சி நம்மை பல விதங்களில் அழித்து வருகிறது.

மிகக் குறைந்த வயதில் பத்துப் பதினொரு வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த பிராய்லர் கோழி இறைச்சிதான் காரணம்.

பிராய்லர் கோழிகள் வளர்க்கும் போது மைக்ரோமைன் – பி.சி.எஃப், டோக்சிலின்- ஈ. எஸ், டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், யூ.எஸ், குர்ராடோக்ஸ் எம்.எஸ், நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசி மூலம் கொடுக்கின்றார்கள்.

இவ்வாறான மருந்துகளே சின்னஞ்சிறு சிறுமிகளை அறியாத வயதில் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக சொல்லப்படுகிறது.

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் இவ்வாறே ஆண்களின் உயிரணுக்களையும் அழித்து விடுகிறது. இதுவே குழந்தையின்மைக்கும் முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுகின்றது.

பிராய்லர் இறைச்சி கோழியின் சதையில் கொலஸ்ட்ரால் மிக அதிக அளவில் உள்ளது.

அதை நாம் உண்ணும் போது நமது உடலில் கெட்ட கொழுப்பு மிக அதிக அளவில் சேருகின்றது.

இந்த கெட்ட கொழுப்பானது நமது உடலில் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும்.

கெட்ட கொலஸ்ட்ரால் நமது உடலில் அதிகரிப்பதால் அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் ரத்த அழுத்தம் நமக்கு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

நம்மில் பலருக்கு 100 இல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளதாம்.

நாம் கடைகளில் உணவகங்களை அதிகளவில் வாங்கி விரும்பி சுவைக்கின்றோம்.

இவ்வாறாக உணவகங்களில் பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதனால் பலரும் கல்லீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்கள்.

அத்துடன் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் ஏற்படுகிறதாம்.

மேலும் தொடர்ந்து பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியிலும் அகப்படுகின்றார்கள்.

அத்துடன் பிராய்லர் இறைச்சி விரும்பி சாப்பிடும் எமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகின்றதாம்.

இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என பல வியாதிகளின் எண்ணிக்கையை கூறிக்கொண்டு போகலாம்.

பிராய்லர் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை மிக அதிகமாக எடுத்துக்கொண்ட மக்கள் பலரும் தற்போது புற்றுநோய் பிரச்சினை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

நாம் ஒவ்வொருவரும் அடைந்து கொள்ளும் விழிப்புணர்வே இந்த சமுதாய விழிப்புணர்வாகும் .

இந்த தகவல்களை மற்றவர்களுக்கும் பயன்பெற பகிர்ந்து கொள்ளுங்கள் நமது எதிர்கால உலகம் நிச்சயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இது ஒரு ஜெற் தமிழ் (Jet Tamil) விழிப்புணர்வு.

By : Ajay

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை