Welcome to Jettamil

ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் முக்கிய அறிவிப்பு…

Share

உலகம் முழுவதும் உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லையென உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை சுமார் 375 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இறப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸால் ஆபத்திலுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை