Welcome to Jettamil

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனம்- 2021 ஆண்டுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..!

Share

தமிழ் பிரதேசத்தில் உள்ள (கிளிநொச்சி) இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மூலம், நமது தமிழ் இளைஞர் யுவதிகள் அதிகளவில் பயன்பெற ஆர்வம் காட்டுவதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமே..!

எனவே இம்முறையாவது நமது தமிழ் இளைஞர் யுவதிகள் விழிப்புடன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பலரின் கல்வித் தகைமை நிலை மற்றும் வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் நிச்சயம் உயர்த்தப்படும்.

மாதாந்தம் 4000/= கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

வெளி மாவட்ட மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்படுகி்றது.

இங்கு 15 வகையான பயிற்சி நெறிகளுக்காக இம் முறை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பயிற்சி கற்கை நிறைவில் NVQ-Level 4 சான்றிதழ் பெற்று சிறந்த தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும்.

பயிற்சி நெறிகள்: மோட்டார் வாகன திருத்துனர், 02 வருடங்கள்

மோட்டார் வாகன மின்சாரவியலாளர், 02 வருடங்கள்

வலு மின்சாரவியலாளர், 02 வருடங்கள்

காற்று பதனமாக்கலும் குளிரூட்டலும், 02 வருடங்கள்

இலத்திரனியல், 02 வருடங்கள்

இயந்திர இயக்குனர் ( ஆயுத இயந்திரம் ), 02 வருடங்கள்

உருக்கியிணைத்தல், 02 வருடங்கள்

வெதுப்பகர், 02 வருடங்கள்

உணவு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், 02 வருடங்கள்

கணிய அளவை உதவியாளர் 02 வருடங்கள்

பட வரைஞர், 02 வருடங்கள்

கட்டுமான தள மேற்பார்வையாளர், 02 வருடங்கள்

நில அளவைப் புல உதவியாளர், 02 வருடங்கள்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், 02 வருடங்கள்

கணனி வன்பொருள் மற்றும் வலையமைப்பு தொழில்நுட்பவியலாளர், 02 வருடங்கள்

வயது எல்லை:

30.04.2021 ம் திகதியன்று 16 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமை:

க.பொ.த ( சா / த ) பரீட்சையில் தமிழ் / சிங்களம் மற்றும் கணிதம் உட்பட 06 பாடங்களில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் சித்தியடைந்திருத்தல்

அல்லது

இலண்டன் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது

குறித்த துறைசார் தேசிய தொழிற்தகைமை மட்டம் – 3 ( NVQ / Level – 3 ) சான்றிதழினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

விஷேட திறமையுள்ள விண்ணப்பதாரிகளுக்கு புத்தாக்கங்களில் ஈடுபட்டு தேசிய / மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று இடங்களில் ஒன்றினைப் பெற்ற சான்றிதழினை வைத்திருப்போரின் விண்ணப்பங்கள் விஷேட கவனத்திற் கொள்ளப்படும்.

குறிப்பு : தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் ( NAITA ) 02 அல்லது அதற்கு மேற்பட்ட வருட பயிற்சியினை மேற் கொள் வோர் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையோர் அல்லர்.

விண்ணப்ப முடிவு திகதி:
30.04.2021

முழு விபரம் மற்றும் விண்ணப்பம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

வாய்ப்பை பயன்படுத்தி தகுதியுடையவர்கள் விண்ணப்பியுங்கள்.

மற்றும் மற்றவர்கள் விண்ணப்பிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முழு விபரம்: Download

ஆன்லைன் அப்லிகேஷன்
Online Application: Apply Now

Join WhatsApp

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை