Welcome to Jettamil

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையில் வாள் வெட்டு தாக்குதல்!

Share

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையில் வாள் வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் முச்சக்கர வண்டி ஒன்றை சேதப்படுத்தியதுடன் நபர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக திடீர் தேடுதல் சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்கள் சற்று  ஓய்ந்திருந்தது.

எனினும் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை