Welcome to Jettamil

ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் – பயிற்சி நெறி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது…!

Share

திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் – மொரட்டுவை, தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி -2021 அனுமதி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி உடன் விண்ணப்பியுங்கள்.

பயிற்சி நெறி விபரம் :

மோட்டார் இயந்திரவியல் (1)

மில்றைற் / வார்ப்பியல் (2 )

காற்று பதனமாக்கல் / குளிரூட்டல் (3)

வலு மின்சாரவியல் (4)

ஆயுத இயந்திரவியல் (5)

மெக்காற்றோனிக் ( கைத்தொழில் ) (6)

வாகன மின்சாரவியல் (7)

டீசல் இயந்திரவியல் (8)

வாகன காற்று பதனமாக்கல் / குளிரூட்டல்(9)

உருக்கியிணைத்தல் (10)

வாகன உடல் திருத்துதலும் வர்ணம் தீட்டுதலும்(11)

போன்ற 11 வகையான பயிற்சி நெறிகள் தொடர்பான விண்ணப்பம் கோரப்படுள்ளது.

தேவையான ஆகக்குறைந்த தகைமைகள் :

( அ ) வயது : 2021.03.31 ஆம் திகதியன்று 16 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல் வேண்டும் .

( ஆ ) கல்வி : க.பொ.த ( சா / த ) பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் ( போதனா மொழி ) , கணிதம் உட்பட 06 பாடங்களில் ஓர் அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் .

அல்லது

இலண்டன் சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி . கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் .

விசேட திறமை :

மின்சாரவியல் / இலத்திரனியல் / இயந்திரவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு தேசிய / மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பெற்ற சான்றிதழுடன் ( ஆ ) கல்வித்தகைமையினை இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் பெற்றிருத்தல் வேண்டும் .

(இ) தேசிய தொழில் பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் 03 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கான பயிற்சியினை பெறுவோர் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையோர் அல்லர் .

விண்ணப்ப முடிவு திகதி :20/07/2021

இவ் பயிற்சி நெறி தொடர்பான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்.

முழு விபரம் : Download

விண்ணப்பம் : Download

Web site : http://www.cgtti.lk/

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை