யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் மின் விநியோகம் துண்டிப்பை சாதகமாக பயன்படுத்தி வீடு ஒன்றில் 40 பவுண் அளவிலான தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (08 ஆம் திகதி) திடீர் மின் விநியோகம் தடைப்பட்ட வேளையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் நகைகள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினமே குறித்த வீட்டின் உரிமையாளர் அறிந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் வல்வெட்டித்துறை – இலகாடு பகுதியிலேயே இடம்பெற்றிருக்கின்றது .
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .