வவுனியா, புளியங்குளம் பகுதியில் டிப்பர் ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது . வவுனியா, புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மையில் வீதியோரமாக துவிச்சக்கரவண்டியில் சென்றவரை அதே வழியில் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியினுள் துவிச்சக்கரவண்டி சிக்குண்டதுடன், துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.