ஆன்லைனில் ஆசன முற்பதிவு மூலம் சாதனை படைத்த இ.போ.ச
இணையத்தளத்தில் பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ததன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை இந்த வருடத்தில் மூன்றரை மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட எண்பதாயிரம் பயணிகள் இருக்கைகள் இணையம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்காலத்தில் சுமார் இருநூறு பேருந்துகள் இந்த சேவைக்காக சேர்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.