Welcome to Jettamil

நாசாவில் இடம் பிடித்த 07 வயது இலங்கை சிறுவன்

Share

நாசாவில் இடம் பிடித்த 07 வயது இலங்கை சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளான்.

அனுராதபுர மாவட்டத்திலுள்ள திரப்பனே மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தம்ம லோசித பிரேமரத்ன என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளான்.

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமை கொண்டுள்ள இம் மாணவன் சர்வதேச போட்டிகளில் பலவற்றில் பங்குபற்றியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நாசா ஏற்பாடு செய்த ஓவிய போட்டியில் இச்சிறுவன் பங்குபற்றியுள்ளான்.

அதன்படி, “விண்வெளியில் வாழ்வதும் வேலை செய்வதும்” என்ற கருப்பொருளில் தம்மா வரைந்த ஓவியம் உலகின் பல நாடுகளின் சிறிய ஓவியங்களைத் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜூலை மாதத்திற்கான நாசாவின் நாட்காட்டியில் தம்மாவின் வெற்றிப் படம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை