சாவகச்சேரி நகரப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாவகச்சேரி நகரப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.