Welcome to Jettamil

நுளம்புக்கு புகை போட்ட முதியவர் தீப்பற்றி உயிரிழப்பு!

Share

நுளம்புக்கு புகை போட்ட முதியவர் தீப்பற்றி உயிரிழப்பு

நுளம்புக்கு புகைப்போட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப்போட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடையில் தீப்பற்றியது. இந்நிலையில் அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை