டெங்கு நுளம்பினை விரட்டும் செயற்பாடு ஊடக அமையத்தினால் முன்னெடுப்பு
யாழ்ப்பாண ஊடக அமையத்தின் எற்பாட்டில் “டெங்கு நுளம்பில் இருந்து விரட்டுவோம், அதில் இருந்து மக்களை தெளிவூட்டுவோம், மக்களுக்காக நாம்” என்னும் கருப்பொருளிலான விழிப்புணர்வுட்டும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக இன்றையதினம் நடைபெற்றது.
குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆரம்பித்து வைத்தார்.
இதில் யாழ்ப்பாண ஊடக அமையத்தின் தலைவர் து.செல்வக் குமார் மற்றும் ஊடகவியாளர்கள் கலந்துகொண்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.









