திண்ணைவேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
திண்ணைவேலிச் சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.
இதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை நேற்றையதினம் (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.
இதனால் திண்ணைவேலிப் பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
திண்ணைவேலிச் சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமது பெயர் விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
ஒத்துழைப்பு வழங்கி தமது உறவினர்களையும் பிரதேசத்தையும் கொவிட் தொற்று பரவலில் இருந்து பாதுகாக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.