யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து தமிழகத்தின் காரைக்காலுடன் இணைக்கும் படகு பயண சேவையை ஆரம்பிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், கோபால் பாக்லே கூறியுள்ளார்.
இதன் மூலம் குறித்த பயண சேவை விரைவில் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இதன் மூலமாக கொழும்பில் இருந்து தூத்துக்குடி வரையிலும் இணைப்பிற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





